விஷால் மனைவி யார் தெரியுமா | do you know vishal wife | Tamil News | kollywood News Tamil Cinema News
Vishal Krishna (born 29 August 1977) is an Indian film actor, producer and anti-piracy activist who works in the Tamil film industry. The younger son of film producer G. K. Reddy, Vishal studied Visual Communications at Loyola College, Chennai. He produces films under his production company, Vishal Film Factory.
He made an entrance into the film industry as an assistant director for Arjun. He then became an actor and played his first lead role in the romantic thriller Chellamae (2004), before going on to star in the commercially successful films Sandakozhi (2005), Thimiru (2006), Thaamirabharani(2007) and Malaikottai(2007). Following a series of unsuccessful films at the box office, Vishal chose to create his own production studio and has since produced and worked on profitable ventures such as Pandiya Naadu (2013) and Naan Sigappu Manithan (2014).
Vishal was elected as the General Secretary of the Nadigar Sangam in October 2015 after initiating a movement against the previous committee. He was expelled from Tamil Film Producers' Council (TFPC) for remarks against the council. Later in April 2017, he won the election and got elected as President of Tamil Film Producers Council.
பிரபல நடிகர் விஷால், தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுச் செயலாளராகவும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார். அவர் நடிகை வரலட்சுமியை காதலித்து வகிக்கிறார். இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்ப தாகவும் செய்திகள் வெளியாயின. தமிழ் சினிமாவில் புரட்சி தளபதி என்று அழைக்கப்படும் முன்னணி நடிகராக வலம் வரும் விஷாலுக்கும் ஆந்திராவைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி தெரிவித்திருந்தார்.
ஹைதராபாத்தை சேர்ந்த அனிஷா ரெட்டி அமெரிக்காவில் படித்துள்ளார். அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய பிறகு 2016ம் ஆண்டு நடிகையாக அறிமுகமான அனிஷா, விஜய் தேவரகொண்டாவின் பெல்லி சூப்புலு மற்றும் அர்ஜுன் ரெட்டி ஆகிய படங்களில் நடித்துள்ளார். அவர் நன்றாக பாடுவார், நாய்கள் என்றால் மிகவும் பிடிக்கும், புத்தகம் எழுதுவதில் ஆர்வம் கொண்டுள்ளார், டிரெக்கிங் செல்பவர். விஷால், அனிஷா திருமணம் பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் நடக்கும் என்று கூறப்படுகிறது.
நடிகர் விஷால் பற்றி ஒரு பார்வை:
ஆகஸ்ட் 29-ம் தேதி 1977-ல் ஜி. கிருஷ்ணா ரெட்டி – ஜானகி தேவி தம்பதியின் இரண்டாவது மகனாகச் சென்னையில் பிறந்து வளர்ந்தவர் விஷால். சக மனிதர்கள், சக கலைஞர்கள் மீது பரிவும் மரியாதையும் கொண்டவர். விலங்குகள் மீதும் மிகவும் அன்பு கொண்டவர். சிறுவயதிலிருந்து வளர்த்துவந்த ஜூலி என்ற நாய் இறந்தபோது கதறி அழுதிருக்கிறார் விஷால். பிரபல நடிகராக ஆனது முதல் தனது பிறந்தநாளை ஆதரவற்றவர்களுடன் கொண்டாடிவருகிறார்.
தனது அம்மாவின் பெயரில் ‘அறக்கட்டளை' தொடங்கி ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவிகள் செய்துவரும் விஷால், நலிந்த கலைஞர்கள், விவசாயிகள் ஆகியோருக்குத் தன்னால் முடிந்தவரை உதவிகள் செய்துவருகிறார்.
விஷாலுக்கு இயக்குநர் அவதாரம் எடுக்கும் எண்ணமும் உண்டு. ‘ நேரம் அமையும்போது நானே எனது கதையை இயக்குவேன்’ என்று கூறியிருக்கும் இவர், நட்புக்காக மோகன்லால் நாயகனாக நடிக்கும் மலையாளப் படத்தில் வில்லனாக நடிக்கச் சம்மதித்திருக்கிறார்.
நண்பரின் பார்வையில் விஷால்
விஷாலை ‘மச்சான்’ என்று அழைத்து நெருக்கம் காட்டும் அவரது திரையுல நண்பர் ஆர்யா. விஷால் பற்றிப் பகிர்ந்துகொண்டபோது…
“‘அவன் இவன்’ படத்துக்காக எந்த நடிகருமே எடுக்கத் தயங்கும் ஆபத்தான முயற்சியில் விஷால் ஈடுபட்டார். மாறுகண் கதாபாத்திரத்துக்காக அவன் பட்ட கஷ்டத்தை அருகிலிருந்து பார்த்தவன் நான். அந்தப் படத்தில் மாறுகண் நடிப்பு மட்டுமல்ல; மாறுகண் கொண்ட ஒருவரால் நவரசங்களையும் வெளிப்படுத்திக் காட்ட முடியும் என்பதை அவன் தனது கதாபாத்திரத்தின் மூலம் அவ்வளவு தத்ரூபமாக நடித்து நிரூபித்துக் காட்டினான். அதற்காக அவனுக்குத் தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும். கிடைக்காததில் எனக்கு வருத்தம் இருக்கிறது. அவனது வளர்ச்சிக்கும் அவனது போராட்ட குணத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அவன் இன்னும் பல உயரங்களை அடைவான். நல்லதைப் பற்றி மட்டுமே சிந்திப்பவன் அவன். அவனோடு நாங்கள் என்றும் தோள் கொடுத்து நிற்போம்.”
என்னுடைய திரையுலக வாழ்க்கை ஒரு வட்டம் என்று கூறியுள்ளார் விஷால். அவர் ஏன் அப்படிச் சொன்னார்?
“என்னுடைய திரையுலக வாழ்க்கையே ஒரு வட்டமாகத்தான் தெரிகிறது. நான் யாரிடம் முதலில் உதவி இயக்குனராகச் சேர்ந்து என் வாழ்க்கையின் முதல் ஊதியத்தை பெற்றேனோ அவரே எனக்கு வில்லனாக இரும்புதிரை படத்தில் நடித்திருந்தார். எனக்கு ஊதியம் கொடுத்தவருக்கு நான் ஊதியம் கொடுக்கிறேன். ஆனாலும், இப்போதும் அவர்தான் எனக்கு குரு. அவர்தான் அர்ஜுன். இது ஒரு உயிரோட்டமான பயணம். நாங்கள் படத்தில் சந்தித்துக் கொள்ளும் காட்சிகள் அனைத்துமே ரசிகர்களை சீட் நுனிக்கே கொண்டுவரும்.”
விஷாலை உதவி இயக்குனராக அர்ஜுன் அறிமுகப்படுத்தினார் என்றால், பட்டத்து யானை படத்தின் மூலம் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவை நாயகியாக விஷால் அறிமுகப்படுத்தினார்.
அட, இதுவும் ஒரு சின்ன வட்டம்தான்.
Source :
Source :
Source :


0 Comments